அக்டோபர் 21 இல் தேர்தல்

அக்டோபர் 21 இல் தேர்தல்

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக அக்டோபர் 21 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 27 ஆம் தேதி முதல் மனுத்தாக்கல் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. தேர்தல் நடந்து மூன்று நாட்கள் கழித்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.