அசாம் வெள்ள பாதிப்பிற்கு இந்தி நடிகர் அக்ஷய்குமார் இரண்டு கோடி ரூபாய் நிதி உதவி

அசாம் வெள்ள பாதிப்பிற்கு இந்தி நடிகர் அக்ஷய்குமார் இரண்டு கோடி ரூபாய் நிதி உதவி

அசாம் வெள்ள பாதிப்பிற்கு இந்தி நடிகர் அக்ஷய்குமார் இரண்டு கோடி ரூபாய் நிதி உதவி. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகப்படியான மழையால் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்டோருக்கு அளித்து வருகின்றனர். இதேபோன்று இந்தி நடிகர் அக்ஷய்குமார் அசாம் வெள்ள பாதிப்பிற்கு தன் பங்கு நிதியாக இரண்டு கோடி ரூபாயை அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனாவால் இடம் அளித்தார். அக்ஷய் குமார் கூறியதாவது வெள்ளத்தால் மக்கள் பலர் வீடுகளையும் உடைமைகளையும் மற்றும் பலர் உறவினர்களையும் இழந்துள்ளனர். கடவுள் எனக்கு நிறைய பணம் கொடுத்துள்ளார் அதை இல்லாதவர்களுக்கு கொடுக்கிறேன். இவரைப் போன்ற அனைவரும் உதவி செய்ய வேண்டும் என அசாம் முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.