அடிதடி மண்டை உடைப்பு - கர்நாடக காங்கிரஸ்

அடிதடி மண்டை உடைப்பு - கர்நாடக காங்கிரஸ்

கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயற்சிப்பதாக கூறி அவர்களில் சிலர்  ஒரு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சொகுசு விடுதியில் தங்கியிருந்த எம்.எல்.ஏக்கள் நேற்று மது விருந்து கொண்டாடினர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில்  ஹோசபெட் எம்.எல்.ஏ ஆனந்தை காம்ப்ளி எம்.எல்.ஏ கணேஷ் பாட்டிலால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.