அணு ஆயுத மிரட்டல் விடுக்கும் பாக்கிஸ்தான்

அணு ஆயுத மிரட்டல் விடுக்கும் பாக்கிஸ்தான்

கடந்த புதன் கிழமை பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவின் "நியூ யார்க் டைம்ஸ்" பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் 'நங்கள் இந்தியாவுடன் பல முறை பேச்சுவார்த்தைக்கு முயற்சித்தும் அவர்கள் எங்களை கண்டுகொள்ளவில்லை எனவே இனி இந்தியாவுடனான பேச்சுவார்தையில் பயனில்லை' என்று குற்றம்சாட்டி இருந்தார். இதன் மூலம் இரு ஆணு ஆயுத நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 


இச்சம்பவம் குறித்து அமெரிக்காவுக்கான இந்திய தூதர் 'ஹர்ஷ வர்தன் சுக்லா' நியூ யார்க் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில் இம்ரான் கானின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். மேலும் "இந்தியா எப்போதெல்லாம் பகிஸ்தானை நோக்கி அமைதிக்கான அடியை எடுத்து வைக்கிறதோ அப்போதெல்லாம் பாக்.., கிடமிருந்து கசப்பான ஆனுபவத்தையே பெற்றுள்ளது. காஷ்மீர் குறித்து பாக்., கண்ணீர்  வடிக்கத் தேவையில்லை. அங்கே இயல்பு நிலை திரும்பி வருகிறது. பள்ளி ,கல்லூரிகள் ,மருத்துவமனைகள் வழக்கம்போல செயல்பட்டு வருகிறது. மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக தகவல் தொழில்நுட்பத்தில் மட்டும்தான் சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது" 

என்றார்.