அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் மறுதேதி அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் மறுதேதி அறிவிப்பு

அண்ணா பல்கலைகழகத்துக்கு உட்பட்ட 538 கல்லூரிகளில் நவம்பர்  15ம் தேதி முதல்   20ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த செமெஸ்டர் தேர்வுகள் கஜா புயலால் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த தேர்வுகள் நாளை 22ம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அட்டவணை படி 15ம் தேதி நடக்கவிருந்த தேர்வு 22ம் தேதி நடைபெறும். மற்ற ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 13 முதல் 17 வரை நடைபெறும். 

தமிழ்நாடு தொழிற்நுட்ப கல்வி இயக்ககத்தால் நடத்தப்படும் பாலிடெக்னிக் தேர்வுகள் நவம்பர் 15 முதல் 17 வரை நடத்தப்படுவதாக இருந்தது. பின்னர்,  கஜா புயலால் அவை நவம்பர்  22 முதல் 24 வரை நடக்கும் என்று மாற்றியமைக்கப்பட்டது.  ஆனால், புயல் பாதித்த பல பகுதிகளில் நிலைமை இன்னமும் சீரடையாத காரணத்தால் இந்த தேர்வுகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு நவம்பர்  27 முதல்  30 வரை நடைபெறும். ஆனால், நவம்பர்  26 முதல்  28 வரை நடைபெற உள்ள தேர்வுகளின் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.