அதிமுக கூட்டணிக்கு சரத்குமார் ஆதரவு

அதிமுக கூட்டணிக்கு சரத்குமார் ஆதரவு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் செவ்வாய்க்கிழமை சந்தித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்புக்குப் பிறகு, அதிமுக கூட்டணிக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். 

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியை ஆதரிக்கிறோம். தொங்கு நாடாளுமன்றம் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளோம். அதிமுகவுடன் இணைந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து வருகிறோம். அந்த அடிப்படையிலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலும் இந்த முடிவை எடுத்துள்ளோம். அதிமுக தலைமைக் கேட்டுக் கொண்டால், தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன் என்றார்.