அதிமுக கூட்டணியில் தமாகா - ஒரு தொகுதி ஒதுக்கீடு

அதிமுக கூட்டணியில் தமாகா - ஒரு தொகுதி ஒதுக்கீடு

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தமாகா தலைவர் வாசன் வீட்டிற்கு சென்ற அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அமைப்பு செயலர் ஜேசிடி பிரபாகரன் நேற்று கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின், கூட்டணி குறித்து இன்று (மார்ச்13) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தமாகா தலைவர் வாசன் கூறினார்.

இந்நிலையில், சென்னையில் உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலில் அதிமுக சார்பில் முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன், தமாகா தலைவர் வாசன், ஞானதேசிகன் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது, அதிமுக கூட்டணியில் தமாகா இணைவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், இ.பி.எஸ்., பழனிசாமி, வாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.