அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகள்

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகள்

பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகள்! 2019ம் ஆண்டில் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் இணைந்துள்ள பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகளும், 1 மாநிலங்களவைத் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். 

தமிழகத்தில் தற்போது காலியாக இருக்கும் 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெறும் இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு தெரிவிக்கும்.பாமகவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 7 தொகுதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். இது வெற்றிக் கூட்டணி, மகாக் கூட்டணி, மக்கள் நலக் கூட்டணி என்றும், புதுச்சேரி உட்பட 40 மக்களவைத் தொகுதிகளிலும் இந்த மகாக் கூட்டணி வெற்றி பெறும் என்றும் அறிவித்தார்.