அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி - இரட்டை இலையில் போட்டி

அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி - இரட்டை இலையில் போட்டி

புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தார். அவரை அதிமுக நிர்வாகிகள் வரவேற்றனர். இதையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோருடன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட அந்தக் கட்சியின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, புதிய நீதிக் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதியை ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட்டனர்மேலும் 21 சட்டப் பேரவைத் தொகுதி காலியிடங்களுக்கும் நடைபெறும் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு புதிய நீதிக் கட்சி தனது முழு ஆதரவை அளிக்கும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது