அதிரடி அப்ரிதி

அதிரடி அப்ரிதி

பாகிஸ்தான் முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிதி லண்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர்,"நாட்டை ஒருமைப்படுத்த முடியவில்லை, பயங்கரவதிகளிடமிருந்து மக்களை காப்பாற்ற முடியவில்லை, இருக்கும் நான்கு மாகாணங்களையே நம்மால் சரியாக கவனிக்க முடியவில்லை. இந்த நிலையில் காஷ்மீர் நமக்கு தேவையில்லை." என்று பேசியுள்ளார். 

இவரது இந்த பேச்சு பாகிஸ்தான் பிரதமராக உள்ள மற்றொரு முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,"அப்ரிதியின் கருத்து அவரது நாட்டிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்றாலும், உண்மை அது தான். காஷ்மீர் என்றும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்." என்று கூறியுள்ளார்.