அனைத்து சிவாலயங்களிலும் நாளை ஆருத்ரா தரிசன கொண்டாட்டம்

அனைத்து சிவாலயங்களிலும் நாளை ஆருத்ரா தரிசன கொண்டாட்டம்

மார்கழி மாதம் பௌர்ணமியும் திருவாதிரை நக்ஷத்திரமும் சேரும் நாளில் ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா நாளை 23.12.2018 (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.

ஆவுடையார் கோவில், சிதம்பரம் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற புராதன சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஆண்டு தோறும் ஆருத்ரா தரிசனத்தன்று மட்டும், ராமநாதபுரம் உத்திரகோச மங்கையில் உள்ள மங்களாம்பிகை உடனுறை மங்களநாத சுவாமி கோவிலில் உள்ள மரகத நடராஜர் சிலையின் சந்தன காப்பு களையப்பட்டு  அபிஷக ஆராதனைகள் நடைபெறும். பின்னர், சிலைக்கு மீண்டும் சந்தன காப்பு சாற்றப்பட்டு பத்திரப்ப்டுத்தப்படும். இந்த நிகழ்வும் நாளை நடைபெற உள்ளது.