அனைவருக்குமான குடிமையியல் சட்டம் வேண்டும் (COMMON CIVIL CODE)

அனைவருக்குமான குடிமையியல் சட்டம் வேண்டும் (COMMON CIVIL CODE)

சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஏன் பொதுகுடிமையியல் சட்டம் கொண்டுவரவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா   மற்றும் அனிருத் போஸ்   கேள்வி எழுப்பியுள்ளனர்.  

இதுதொடர்பாக அவர்கள் தெரிவித்ததாவது குடிமையியல் சட்டங்கள் கொண்டு வந்து 63 ஆண்டுகள் ஆகின்றன, ஆனால் நாம் இன்னும் தனிசட்டங்களை பயன்படுத்திவருகிறோம்.  கோவா மாநிலத்தில் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான குடிமையியல் சட்டங்கள் இருக்கும் போது இந்தியா முழுவதும் இதனை கொண்டுவருவதில் ஏன் இவ்வளவு தாமதம் ?

பொதுச்சட்டம் தான் மதங்களுக்கிடையே ஒற்றுமையை மேம்படுத்தும் என  கருத்து தெரிவித்துள்ளனர்.