அபிநந்தன் நாடு திரும்பினார் - மக்கள் ஆரவார வரவேற்பு

அபிநந்தன் நாடு திரும்பினார் - மக்கள் ஆரவார வரவேற்பு

பாகிஸ்தான் பிடியில் சிக்கிய அபிநந்தன் சுமார் இரண்டரை நாள்களுக்குப் பிறகு நாடு திரும்பியுள்ளார். அபிநந்தன் பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை லாகூரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதுஇறுதியாக அபிநந்தன், இருநாட்டுக்கும் பொதுவான எல்லைப் பகுதிக்கு அழைத்து வரப்பட்டு, அங்கு இந்திய விமானப் படை மற்றும் எல்லை பாதுகாப்புப் படை உயரதிகாரிகள் இருவரிடம் இரவு 9.20 மணியளவில் ஒப்படைக்கப்பட்டார்.

நாடு திரும்பும் அபிநந்தனை வரவேற்கும் வகையில் பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான அட்டாரியில் வெள்ளிக்கிழமை காலை முதலே மக்கள் பெருந்திரளாகக் கூடி ஆடிப், பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

பிரதமர், நாடு திரும்பிய விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்கிறேன். உங்களின் (அபிநந்தன்) தைரியத்துக்காக நாடே பெருமை கொள்கிறது. 130 கோடி இந்தியர்களுக்கும் உத்வேகம் அளிப்பவர்களாக நமது பாதுகாப்புப் படையினர் உள்ளனர் எனறார். வந்தே மாதரம்!