அப்துல்லாவையும் முப்தியையும் தேசத்தைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம் - பிரதமர் நரேந்திர மோடி

அப்துல்லாவையும் முப்தியையும் தேசத்தைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம் - பிரதமர் நரேந்திர மோடி

சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சியின் உமர் அப்துல்லா தங்கள் மாநிலத்துக்கு தனியாக பிரதமர் தேவை என்று கோரிக்கை எழுப்பியிருந்தார். அதை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி காட்டமாகப் பேசினார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைக் கடந்த 3 தலைமுறைகளாக அப்துல்லா, முப்தி குடும்பத்தாரும் ஆண்டுவிட்டார்கள். மூன்று தலைமுறைகளாக மாநிலத்தைச் சுரண்டிவிட்டார்கள். மாநிலத்தின் எதிர்காலம் கருதி, அவர்களை மக்கள் விரட்டியடிக்க வேண்டும். இவர்களைத் தோற்கடித்தால்தான், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பான எதிர்காலம் அமையும். ஒட்டுமொத்த குடும்பத்தாரையும் அரசியலுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள். அவர்களின் நோக்கம் நாட்டைத் துண்டாடவேண்டும் என்பதுதான். ஆனால், அதற்கு ஒருபோதும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று ஜம்மு காஷ்மீரின் கதுவா நகரில்பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசினார்.