அமெரிக்காவின் உதவியை நாடும் இந்தியா - புல்வாமா தாக்குதலில் இணை சிம் கார்டுகள் பயன்பாடு

அமெரிக்காவின் உதவியை நாடும் இந்தியா - புல்வாமா தாக்குதலில் இணை சிம் கார்டுகள் பயன்பாடு

கடந்த மாதம் 14-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள புல்வாமாவில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 44 சிஆர்பிஎப்வீரர்கள் இறந்தனர். இந்நிலையில் இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ்-இ-முகமது (ஜேஇஎம்) தீவிரவாத அமைப்பின் தற்கொலைப்படையைச் சேர்ந்த ஆதில் அகமது தர் இணை சிம் கார்டுகளைப் பயன்படுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எல்லை தாண்டி வந்து தீவிரவாதத்தில் ஈடுபடும் தீவிரவாதிகள், இணை சிம் கார்டுகளை பயன்படுத்தும் புதிய முறையை தற்போது கையாண்டு வருகின்றனர். இந்த சிம் கார்டுகள் மூலம் கம்ப்யூட்டர் வழியாக தொலைபேசி நம்பர்உருவாக்கப்படும். ஸ்மார்ட்போனில் செயலியை டவுன்லோடுசெய்வதன் மூலம் அந்த செல்போன் எண்ணைப் பயன்படுத்த லாம். இந்த செயலிக்கு சிம் கார்டு தேவைப்படாது இதையே விர்ச்சுவல் சிம் என்று அழைக்கிறோம். இதுபோன்ற சேவையை அமெரிக்க நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

இதனால் தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்ட விர்ச்சுவல் சிம் தொடர்பான விவரங்களைப் பெற அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளோம். அந்த சிம் கார்டில் இருந்த செல்போன் நம்பர்கள், இன்டர்நெட் முகவரிகளையும் கேட்டுள்ளோம்” என்றார். - பிடிஐ