அமெரிக்கா 'அந்தர் பல்டி' - விண்வெளியிலும் இந்தியாவுடனான நட்புறவை தொடர விரும்புகிறோம்

அமெரிக்கா 'அந்தர் பல்டி' - விண்வெளியிலும் இந்தியாவுடனான நட்புறவை தொடர விரும்புகிறோம்

முன்னதாக, செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் ஏவுகணையை (ஏ-சாட்) இந்தியா பரிசோதித்ததால் விண்வெளியில் சுற்றி வரும் உடைந்த உதிரி பாகங்களால் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) தெரிவித்துள்ளது. 

விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைக்கோளை ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் சோதனையை இந்தியா கடந்த மாதம் 27-ஆம் தேதி மேற்கொண்டது. அப்போது, பரிசோதனைக்காக இந்திய செயற்கைக்கோள் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த மிஷன் சக்தி திட்டம் வெற்றிகரமாக மேற்கொண்டதன் மூலம், இந்த வல்லமையைக் கொண்டுள்ள அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் மாளிகை துணை செய்தித்தொடர்பாளர்  இந்தியா-அமெரிக்கா இடையே நல்ல நட்புணர்வு உள்ளது. எனவே இதை என்றும் தொடர அமெரிக்கா விரும்புகிறது. குறிப்பாக பல்வேறு துறைகளிலும், வர்த்தக ரீதியிலும், வெளியுறவு கொள்கை ரீதியாகவும் இருநாடுகளுக்கு இடையே உள்ள நட்புணர்வு விண்வெளி ஆராய்ச்சியிலும் தொடர வேண்டும் என்று விரும்புகிறோம். இதனால் விண்வெளி பாதுகாப்பு மேம்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.