அயோத்தியா வழக்கு  : உச்ச நீதிமன்றத்தில் இன்று முதல் விசாரணை

அயோத்தியா வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் இன்று முதல் விசாரணை

அயோத்தியா  ராமஜென்ம பூமி - பாபரி மஸ்ஜித் வழக்கு இன்று 5 நீதிபதிகள் கொண்ட பென்ச் முன்பு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மற்றும் நீதிபதிகள் எஸ்.எ. போப்டே,  என்.வி.ரமணா, யூ.யூ.லலித், டி.ஒய்.சந்திரசூட் ஆகிய 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது. இந்த வழக்கு சம்பந்தமாக 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கின் தீர்ப்பு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது.