அயோத்தியா வழக்கை விரைந்து முடியுங்கள்

அயோத்தியா வழக்கை விரைந்து முடியுங்கள்

"அயோத்தியா வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்." என்று உச்ச நீதிமன்றத்தை மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கேட்டுக்கொண்டுள்ளார். அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் 15வது தேசிய மாநாட்டில் பேசிய அவர் இந்த கோரிக்கையை வைத்தார்.

"சபரிமலை விஷயத்தில் தீர்ப்பு வழங்கி முடித்து வைக்க முடியுமானால், அயோத்தியா விஷயத்தில் ஏன் முடியாது?" என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார். எதிர்காலத்தில் நீதிபதிகள் நியமனத்திற்கு இந்திய அளவில் ஒரு தேர்வு வாரியம் அமைக்கப்படுவது பற்றியும் அமைச்சர் குறிப்பிட்டார். ஏழைகள் மற்றும் துன்பப்படுவோரின் துயர் தீர்க்க வழக்குகளை விரைந்து கையாள வேண்டும் என்று வழக்கறிஞர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா, அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.