அயோத்தியில் நாளை பேரணி

அயோத்தியில் நாளை பேரணி

அயோத்தி ராமர் கோவில் பிரச்சனை பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் உள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படவேண்டும் என்று இந்துக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். அயோத்தி ராம ஜன்ம பூமி வழக்கை நீதிமன்றம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் விசாரிக்க முடியும் என்று கூறிவிட்டது. 

இதனால், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி விஸ்வ இந்து பரிக்ஷத், ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் நாளை அயோத்தியில் பிரம்மாண்ட பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளன. இந்த பேரணியில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது.