அயோத்தி தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொள்வர்- அமித்ஷா

அயோத்தி தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொள்வர்- அமித்ஷா

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் அரசு தயார் நிலையில் உள்ளதா, சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதை தடுக்க தயாராக உள்ளதா..? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமித்ஷா. தீர்ப்பும் சமயத்தில் சிலர் ஆதரிப்பார்கள்; சிலர் எதிர்ப்பார்கள். ஆனால் முடிவில் அனைவரும் ஏற்றுக் கொள்வர்.

சுப்ரீம் கோர்ட் சுயமாகவே செயல்படுகிறது. யாருடைய விருப்பு- வெறுப்புக்களின் அடிப்படையில் செயல்படவில்லை. நீண்ட காலத்திற்கு பிறகு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வர உள்ளது. தற்போது தினந்தோறும் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. விரைவில் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். அரசு, அயோத்தி விவகாரத்தில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. அனைத்து மதங்களையும் சமமாகவே நாங்கள் பார்க்கிறோம். அனைத்து மத வழிபாட்டு தலங்களும் ஒன்று தான் என்றார்.