அயோத்தி வழக்கில் ஆஜராக கல்யாண் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு

அயோத்தி வழக்கில் ஆஜராக கல்யாண் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு

உத்தர பிரதேச முதல்வராக கல்யாண் சிங், 87. ஆட்சியின் போது தான் , அயோத்தியில், பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக, கல்யாண்சிங் மற்றும் பா.ஜ., மூத்த தலைவர்களான, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், ராஜஸ்தான் மாநில கவர்னராக கல்யாண்சிங் நியமிக்கப்பட்டார்.

கல்யாண் சிங்கின், ஐந்தாண்டு பதவிக் காலம் கடந்த சிலவாரங்களுக்கு முன் முடிவடைந்ததை அடுத்து, அவர் ,பா.ஜ.,வில் இணைந்தார். இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கில் செப். 27-ல் நேரில் ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.