அயோத்தி வழக்கில் மத்தியஸ்தர் மூலம் தீர்வு

அயோத்தி வழக்கில் மத்தியஸ்தர் மூலம் தீர்வு

யோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தரை நியமித்து சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அயோத்தி நிலப் பிரச்னையில் தீர்வு காண, ஓய்வு பெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்த குழு அமைக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்தியஸ்தர் குழுவில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு என 3 பேர் இடம்பெற்றுள்ளனர். 

அயோத்தி பிரச்னை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ. நாஸர் ஆகியோரைக் கொண்ட அமர்வு இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அதேநேரத்தில், முஸ்லிம் அமைப்புகள் அனைத்தும், மத்தியஸ்தரை நியமிப்பதற்கு ஆதரவு தெரிவித்தன. ஹிந்து அமைப்பான நிர்மோஹி அகாரா, ஓய்வு பெற்ற நீதிபதிகளான குரியன் ஜோசப், ஏ.கே.பட்நாயக், ஜி.எஸ். சிங்வி ஆகியோரின் பெயர்களை பரிந்துரைத்தது. ஹிந்து மகா சபை, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதிகளான ஜே.எஸ்.கேஹர், தீபக் மிஸ்ரா, நீதிபதி (ஓய்வு) ஏ.கே.பட்நாயக் ஆகியோரின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது. 

மத்தியஸ்தம் தொடர்பான பேச்சுவார்த்தை ஒரு வாரத்தில் தொடங்கி 8 வாரத்தில் நடந்து முடிய வேண்டும். அயோத்தி சமரச பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்களை ஊடகங்கள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.