அயோத்தி வழக்கில் U TURN

அயோத்தி வழக்கில் U TURN

அயோத்தியாவில் உள்ள ராம ஜன்ம பூமி தொடர்பான வழக்கு இன்று  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மற்றும் நீதிபதிகள் எஸ்.எ. போப்டே,  என்.வி.ரமணா, யூ.யூ.லலித், டி.ஒய்.சந்திரசூட் ஆகிய 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு சம்பந்தமாக 14 மனுக்கள் விசாரிக்கப்பட இருந்தன. 

இந்த நிலையில் இஸ்லாமிய அமைப்பினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவான், நீதிபதி உதய் லலித் வழக்கறிஞராக இருந்த போது  இந்த வழக்கு சம்பந்தமாக முன்பு அப்போதைய உத்திரபிரதேச முதலமைச்சர் கல்யாண் சிங்க்கு ஆதரவாக ஆஜரானதை சுட்டிக்காட்டினார். இதைத் தொடர்ந்து நீதிபதி உதய் லலித் அவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று யாரும் கோராத போதும், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதாக அறிவித்தார். 

இதனால், வேறு ஒரு புதிய பென்ச் முன்பு இந்த வழக்கு வரும் 29ம் தேதி விசாரிக்கப்படும் என்று சொல்லி ஒத்திவைக்கப்பட்டது. புதிய பென்ச் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த வழக்கு விசாரணை புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் வந்து சேர்ந்துள்ளது.