அயோத்தி வழக்கு நேரடி ஒளிபரப்பு மனு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

அயோத்தி வழக்கு நேரடி ஒளிபரப்பு மனு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

உத்தர பிரதேச மாநிலம்,அயோத்தியில் உள்ள, ராம ஜென்ம பூமி -- பாபர் மசூதி நில விவகாரத்தை, அமைதியான முறையில் பேசித் தீர்க்க அமைக்கப்பட்ட, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, கலிபுல்லா தலைமையிலான, மூன்று பேர் மத்தியஸ்த குழுவின் முயற்சி தோல்வி அடைந்தது.இதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கை, ஆகஸ்ட் முதல், நாள் தோறும் விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களில் ஒருவரான, கே.என்.கோவிந்தாச்சார்யா, அயோத்தி வழக்கின் விசாரணையை, 'வீடியோ' பதிவு செய்ய வேண்டும்.'டிவி'யில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன் மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர்தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தனர்.