அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தர் - உச்சநீதிமன்றம் யோசனை

அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தர் - உச்சநீதிமன்றம் யோசனை

அயோத்தி பிரச்னை தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்தே, டி.ஒய். சந்திராசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ. நாஸர் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அயோத்தி விவகாரத்தில் இருதரப்பும் ஏற்கும் வகையில் தீர்வு காண்பதற்கு, மத்தியஸ்தர்களின் பெயர்களை அளிக்கும்படி மனுதாரர்களை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. 

அப்போது நிர்மோஹி அகாரா தவிர்த்த பிற ஹிந்து அமைப்புகள், மத்தியஸ்தரை நியமித்து, அயோத்தி பிரச்னை குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை அவரிடம் அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. அதேநேரத்தில், முஸ்லிம் அமைப்புகள் அனைத்தும், மத்தியஸ்தரை நியமிப்பதற்கு ஆதரவு தெரிவித்தன. ராம் லாலா அமைப்பின் சார்பில் மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்யநாதன் ஆஜராகி வாதாடுகையில், "மத்தியஸ்தத்தின் மூலம் எந்த முடிவும் கிடைக்காது. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு தோல்வியே கிடைத்தது.  

மத்தியஸ்தத்தை முஸ்லிம் அமைப்புகள் ஆதரித்தன. அந்த அமைப்புகள் சார்பில் வாதாடிய வழக்குரைஞர் கூறுகையில், "மத்தியஸ்தரை நியமிப்பதை ஆதரிக்கிறோம். இந்த நடவடிக்கை அனைத்தும் கேமரா முன்னிலையில் நடைபெற வேண்டும். இறுதி அறிக்கை கைக்கு கிடைக்கும் வரையில், அதன் விவரத்தை வெளியிடக் கூடாது' என்றனர். 

இந்த வழக்கு, வெறும் நிலம் தொடர்பானது மட்டுமல்ல. மக்களின் நம்பிக்கை, உணர்வும் இதில் சம்பந்தப்பட்டுள்ளது. அயோத்தி விவகாரத்தை மத்தியஸ்தத்துக்கு அனுப்புவதா? என்பது குறித்த முடிவை உச்சநீதிமன்றம் விரைவில் அறிவிக்கும். இந்த விவகாரத்தில், இருதரப்பும் ஏற்கும் வகையில் முடிவு எட்டப்படுவதற்கு, மத்தியஸ்தர்களின் பெயர்களை அளிக்கும்படி மனுதாரர்களை கேட்டுக் கொள்கிறோம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.