அரசு அலுவலகங்களில் புத்தாண்டு பரிசு மழை

அரசு அலுவலகங்களில் புத்தாண்டு பரிசு மழை

தமிழக சுகாதார பணிகள் மற்றும் மின் வாரிய துறை அலுவலகங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் புத்தாண்டு பரிசாக பெறப்பட்ட பல லட்ச ரூபாய் ரொக்கமும் தங்க காசுகளும் இதர பரிசுப்பொருட்களும்  கைப்பற்றப்பட்டுள்ளன.

விழுப்புரத்தில் உள்ள தமிழக சுகாதாரபணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பல லட்ச ரூபாய் ரொக்கம், தங்க காசுகள், டைரிகள், புத்தாடைகள் உள்ளிட்ட பரிசு பொருட்களை கைப்பற்றினர். மாவட்ட சுகாதரத்துறை துணை இயக்குனர் பாலுசாமியிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இங்கும் புத்தாண்டு பரிசாக பெறப்பட்ட 1 லட்சத்தி 15 ஆயிரம்  ரூபாய் ரொக்கம் மற்றும் 18 கிராம் தங்க காசுகள் கைப்பற்றப்பட்டன.இதனை மின்வாரிய தலைமை பொறியாளர் முத்து தனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகளிடம் புத்தாண்டு பரிசாக பெற்றதாக கூறப்படுகிறது. அவரிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.