அரசு பள்ளிக்கு 3 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கிய கிராம மக்கள்

அரசு பள்ளிக்கு 3 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கிய கிராம மக்கள்

புதுக்கோட்டை அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை வழங்கிய அப்பகுதி மக்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 30 ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்மார்ட் வகுப்புகள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பெற்றுள்ளன. குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து ஆர்வமுடன் படித்து வருகின்றனர். இதை ஊக்குவிக்கும் வகையில் சீருடை ப்ரொஜெக்டர் ஒலிபெருக்கி உள்ளிட்ட மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை இந்த பகுதி மக்கள் வழங்கியுள்ளனர். இதனை அடுத்து கிராம மக்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெற்றோர் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.