அருணாசல பிரதேசத்தில் முன்னேற்ற பாதை

அருணாசல பிரதேசத்தில் முன்னேற்ற பாதை

மத்திய சாலை  போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.நித்தின் கட்கரி  நேற்று அருணாசல பிரதேசத்தில் ரூ. 28,000 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் லோஹித் மற்றும் திபங் நதிகளின் மீது கட்டப்பட்ட இரண்டு பாலங்களையும் அவர் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அமைச்சர்,"அருணாசல பிரதேசத்தில் மூங்கில் உற்பத்தி சிறப்பாக இருக்கிறது. இதனை பயன்படுத்தி உயிரி எரிபொருள் தயாரிக்கும் பட்சத்தில் வேலை வாய்ப்பு பெருகும், விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படும்." என்று கூறினார்.

இது வரை தனது துறையிலிருந்து சுமார் ரூ.10,000 கோடி அளவிற்கு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்துமே வெளிப்படையாகவும், விரைவாகவும் முடிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

பின்னர் அவர், சிரோவில் ரூ.5583.92 கோடி மதிப்பில்  472 கி.மீ தூரத்திற்கான தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அமைச்சருடன் அருணாசல பிரதேச முதல்வர் பீமா காண்டு மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு ஆகியோரும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.