அருண் ஜெட்லீ காலமானார்

அருண் ஜெட்லீ காலமானார்

2014-19 ஆகிய ஆண்டுகளில் மோடி அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லீ காலமானார் .ஆகஸ்ட் 9 ம் தேதி மூச்சு திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

பா.ஜ.க மூத்த தலைவரான இவர் தனது அரசியல் வாழ்வை ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான எ.பி.வி.பி யில் துவங்கி உச்சநீதி மன்ற தலைமை வழக்கறிஞராக இருந்து பின்னர் 2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிக்கு பிறகு மத்திய நிதி அமைச்சராக இருந்து ஜி.எஸ்.டி வரி சீரமைப்பு முறை,பண மதிப்பிழப்பு போன்ற பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியவர் என்பது குறிப்பிடதக்கது