அரையாண்டு தேர்வுகள் தேதி அறிவிப்பு

அரையாண்டு தேர்வுகள் தேதி அறிவிப்பு

தமிழக அரசு பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை. 

10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 10ம் தேதி தொடங்குகிறது.

அரையாண்டு தேர்வுகள் குறித்து, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுககான அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 10ம் தேதி தொடங்கி, டிசம்பர் 22ம் தேதி முடிகிறது. தேர்வு நாட்களில், மாணவர்கள் காலை 10 மணிக்குள் தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும். விடைத்தாளில் மாணவர்கள் சுயவிவரங்களைப் பதிவுசெய்ய 5 நிமிடங்களும், வினாத்தாள் படிகக 10 நிமிடங்களும் ஒதுக்கப்படும். சரியாக 12.45 மணிக்கு தேர்வு நிறைவடையும். அனைத்து பள்ளிகளும், அட்டவணைப்படி தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.