அலோக் வர்மாவின் திருவிளையாடல்கள்

அலோக் வர்மாவின் திருவிளையாடல்கள்

     மத்திய அரசு பிறப்பித்த உத்திரவை ரத்து செய்ய கோரி உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடு்த்த அலோக் வர்மாவின் வழக்கில் உச்ச நீதி மன்றம் 8.1.2019ந் தேதி தீர்ப்பு வழங்கியதுஉச்ச நீதி மன்ற தீர்ப்பில்,  டெல்லி சிறப்பு காவல் அமைப்புச் சட்டத்தின் 4பி(2)வது பிரிவில் குறிப்பிட்டுள்ளப்படி, சி.பி.. இயக்குநரை தேர்வு செய்யும் குழுவின் ஒப்புதல் இல்லாமல் பணியிலிருந்து மாற்ற முடியாது என்பதை சுட்டிக்காட்டி, மீண்டும் சிபிஐ இயக்குநாரக நியமிக்க உத்திரவிட்டதுஇவ்வாறு தீர்ப்பு வெளியானவுடன், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள், உச்ச நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பு மத்திய அரசுக்கான பாடம் என விமர்சனம் செய்தார்கள்ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் சுட்டிக் காடடியுள்ள சில விஷயங்களை கவனிக்க தவறி விட்டார்கள். அன்றாட பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும், கொள்கை முடிவுகள் எதையும் எடுக்க கூடாது என குறிப்பிட்டுள்ளதும், மத்திய புலனாய்வு கமிஷன் கொடுத்த அறிக்கையின் மீது உயர் மட்ட குழு முடிவு செய்து கொள்ளலாம் என உச்ச நீதி மன்றம் சுட்டிக் காட்டியதை மறந்து விட்டு, மோடியை விமர்சனம் செய்ய முற்பட்டார்கள்.

            உயர் மட்ட குழு முடிவின்படி , சி.பி.. டைரக்டர் திரு. அலோக் வர்மா மாற்று பதவிக்கு  அதாவது தீயணைப்புத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்இந்த குழுவில் பிரதமர் மோடி, உச்ச நீதி மன்ற நீதிபதி திரு. சிக்ரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவர் மல்லிகர்ஜூனே கார்கரே உள்ளிட்டவர்கள்உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பின் படி, ஒரு வாரத்திற்குள் உயர் மட்ட குழு கூடி இறுதி முடிவு எடுக்க உத்திரவிட்டதுஉத்திரவின் படி கூடிய உயர் மட்ட குழுவின் பரிந்துரையின் படி அலோக் வர்மா பணி மாற்றம் செய்யப்பட்டார்இந்த முடிவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகர்ஜூனே கார்கரே மாறுபட்ட கருத்தை முன் வைத்தார்இதன் காரணமாக 3-ல் 2 பணி மாற்றத்திற்கு ஆதரவு கொடுத்ததால் மாற்றப்பட்டார்.   தனது பணியை தொடர விருப்பமில்லாமல், பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

      சி.பி.. இயக்குநர்களில் ஒருவரான ரகேஷ் சக்ஸ்சேனா 24.5.2018ந் தேதி கேபினட் செயலாளருக்கு அலோக் வர்மா மீது குற்றச்சாட்டுகள் சுமத்தி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் விசாரணை நடத்த  மத்திய புலனாய்வு ஆணையத்திற்கு கேபினட் செயலாளர் கடிதம் அனுப்பினார்இதன் அடிப்படையில்  சி.பி.. டைரக்டர் திரு.அலோக் வர்மா மீது சுமத்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்திய மத்திய புலனாய்வு அமைப்பு 60 பக்க அறிக்கையை உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்தார்கள்இந்த அறிக்கையுடன் இணைப்பாக 200 பக்கங்கள கொண்ட ஆவணங்களையும் இணைத்திருந்தார்கள்.   அலோக் வர்மா மீது 10 குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன, இதில் ஐந்து குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகவும், இரண்டு குற்றச்சாட்டுகளை இன்னும் முழுமையாக விசாரிக்க வேண்டும் எனவும், மூன்று குற்றச்சாட்டுகளில் உண்மை தன்மை கிடையாது என்றும் தங்களது அறிக்கையில் தெரிவித்திருந்தார்கள்

      மத்திய புலனாய்வு கமிஷன்  ஐந்து குற்றச்சாட்டுகள் பற்றிய முழுமையான விசாரணை  நடத்தலாம் என பரிந்துரை செய்ததுஇதில் சில வழக்குகளில் அலோக் வர்மாவின் குறிக்கீடு உள்ளது என்பதற்கு முகாந்திரம் உள்ளது.   .டி.பி. வங்கியில் பண மோசடி செய்த குற்றத்திற்காக வழக்கு தொடுக்கப்படட நிராவ் மோடியின் வழக்கை விசாரணை செய்த சி.பி.நிராவ் மோடிக்கு ஆதரவாக அலோக் வர்மா செயல்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையுள்ளதாக சி.வி.சி. குறிப்பிட்டுள்ளதுநிராவ் மோடியின் வழக்கு சம்பந்தமாக சி.பி..யில் உள்ள internal emails   தகவல்கள் மூலம் குற்றவாளிகள் எவ்வாறு கண்டறியப்பட்டது என்பதை நிராவ் மோடிக்கு கிடைக்கும் படி செய்துள்ளார்.   நிராவ் மோடி வழக்கை விசாரணை செய்து வரும் அதிகாரி ராஜீவ் சிங் தனது அறையை பூட்டிவிட்டு சென்ற பின்னர் Computer Emergency Response Team ( CERT) of the ministry of information technology  உதவியுடன் நிராவ் மோடி சம்பந்தமாக பதியப்பட்ட டேட்டாவை தரவிறக்கம் செய்வதற்கு துணையாக இருந்தவர் அலோக் வர்மாஇது பற்றிய கேள்விக்கு விளக்கமளிக்க மறுத்துவிட்டார்.

      ரூ600 கோடி .டி.பி.. வங்கியில் மோசடி செய்த தொழிலதிபர் சிவசங்கரனுக்கு எதிராக கொடுக்கப்பட்ட    எல்..சியை நீர்த்துப் போக செய்தவர் அலோக் வர்மா.   சிவசங்கரன் மீது எல்..சியை நீர்த்து போக செய்ததும் மட்டுமில்லாமல், டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு 3-ல் இருந்த வழக்கை   Bank Securities and Fraud Cell ( BS&FC) Bangaluru  மாற்றியது அலோக் வர்மா .   வழக்கை மாற்றியதின் காரணமாக .சிதம்பரத்தை காப்பற்ற கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தப்பட்டது.   இந்த வழக்கில் செய்த தில்லு முல்லுவை போல், மல்லைய்யாவின் வழக்கிலும் அக்டோபர் 2015 –ல் வழங்கப்பட்ட எல்..சி.ஐய ( LoCவைத்து இங்கிலாந்து நீதி மன்றம் நாடு கடத்த உத்திரவிட்டதை நீர்த்து போக செய்யவேதனக்கு நெருக்கமான அதிகாரி  .கே.சர்மா மூலமாக, குடியேற்ற அதிகாரிகளுக்கு, மல்லைய்யாவிற்கு வழங்கப்பட்ட எல்..சி. என்பது தங்களின் தகவலுக்கு மட்டுமே தவிர அவரை தடுத்து கைது செய்வது கிடையாது என தகவல் கொடுக்கப்பட்டு, மல்லையாவுக்கு ஆதரவாக செயல்பட்டவர் அலோக் வர்மா.

      திருவாளர் அலோக் வர்மாவின் நம்பக்கதன்மையை கேள்விகுறியாக்கிய மூன்று நிகழ்வுகள் உண்டுஅடிஷனல் சூப்பிரடெண்ட் Sudhanshu Khare என்பவர் உத்திரபிரதேசத்திற்கு மாற்றல் செய்யப்பட்டார்உத்திரபிரதேச ATS additional SP Rajesh Sahni   என்பவர் மர்மமான முறையில் குண்டு பாய்ந்து அலுவலகத்தில் இறந்து கிடந்தார்உத்திரபிரதேச அரசின் முதல்வர் யோகி ஆதியாநாத் சி.பி.. விசாரணைக்கு உத்திரவிட்ட பின்னரும், அலோக் வர்மா சில அதிகாரிகளை காப்பாற்றுவதற்கு வழக்கை விசாரணைக்கு ஏற்கவில்லை.    தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தில் நடந்த ஊழலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை காப்பதற்காக பல்வேறு முறைகேடுகளில் அலோக் வர்மா ஈடுபட்டதாக  Sudhanshu Khare   தெரிவித்தார்இவர் காப்பாற்றிய ரஞ்சித் சிங் மற்றும் அபிஷேக் சிங் இருவரும் லக்னே பாரத வங்கி மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள்ரஞ்சித் சிங் மற்றும் அபிஷேக் சிங் மீது நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்ற முயற்சித்த அதிகாரி ராஜீவ் சிங் மீது துறை சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்த காரணத்தால், Sudhanshu Khare  மீது விசாரணை நடத்த அலோக் வர்மா உத்திரவிட்டார்.

      மத்திய புலனாய்வு கமிஷன் உச்ச நீதி மன்றத்திற்கு அளித்த அறிக்கையில், மாமிச வியாபாரி மோயின் குரேஷி ரூ2 கோடி   லஞ்சம் கொடுத்த வழக்கில் அலோக் வர்மாவின் நடவடிக்கை சந்தேகத்திற்கிடமான முறையில் உள்ளதுஏன் என்றால் இது சம்பந்தமான ஆவணங்களை சமர்பிக்க காலதாமதம் ஏற்படுத்தியது மட்டுமில்லாமல், முழுமையான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்கள்முழு உண்மையும் வெளி வரவேண்டுமானால், உச்ச நீதி மன்றத்தில்  கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்கள்.

      இப்படிப்பட்டவருக்கு தான் காங்கிரஸ் கட்சி ஆதரவாக பேசி வருகிறதுஅலோக் வர்மாவை சி.பி.. இயக்குநாரக நியமிக்கபட்ட போது, எதிர்ப்பு தெரிவித்தார் மல்லிகர்ஜூனே கார்கரே, கூறப்பட்ட காரணம்முழு தகுதியற்றவர் என்று கூறியவர்தான், மல்லிகார்ஜுன கார்கே அவர் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்ட போது, திறமையற்றவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கூறி வரும் குற்றச்சாட்டு, ரஃபேல் விமான கொள்முதலில் நடந்த முறைகேட்டை கண்டு பிடிக்க முயன்ற காரணத்திற்காக பழி வாங்கப்படுகிறார் என்பதாகும்இம் மாதிரியான குற்றச்சாட்டை வைப்பவர் இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ராகுல் காந்திஅரசில் அமைப்பு சட்டத்தை முழுமையாக படிக்காமலும், சி.பி. பற்றிய சட்ட வரைவு என்ன என்பது தெரியாமலும் குற்றச்சாட்டை முன் வைக்கிறார்நீதி மன்றத்தின் உத்திரவில்லாமலும், பாராளுமன்ற அனுமதியில்லாமலும் சி.பி.. எந்த வழக்கையும் விசாரிக்க முடியாது என்ற அடிப்படை விதியை கூட தெரிந்து கொள்ளாமல் விமர்சனம் செய்யும் ராகுல் காந்தி அரசியவாதி என்பதை விட அரசியல் வியாதி என்றால் மிகையாகாது.

-    ஈரோடு சரவணன்