அல்காயிதா மற்றும் ஐ.எஸ். அமைப்புகள் கேரள கல்லூரி வளாகங்களில்  தங்களது பிடியை இறுக்குகிறது

அல்காயிதா மற்றும் ஐ.எஸ். அமைப்புகள் கேரள கல்லூரி வளாகங்களில் தங்களது பிடியை இறுக்குகிறது

   மேற்படி செய்தி கேரளத்தில் உள்ள ஜனம் தொலைக்காட்சி மற்றும் 24 மணி நேர மளையாள செய்தி சேனல்களில் சில தினங்களுக்கு முன்  ஒலிப்பரப்பாகியுள்ளது.   தமிழகத்தில் இந்த செய்தி பற்றி எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.   திருவந்தபுரத்திற்கு அருகில் உள்ள வர்கலா (Varkala )  என்ற ஊரில் உள்ள சி.ஹெச். முகமது கோயா மெமோரியல் கல்லூரியில் , மாணவர்கள் அல்காயிதா தொண்டர்கள் போலவும், ஐ.எஸ். அமைப்பினரை போலவும் உடையணிந்து ஊர்வலம் சென்றுள்ளார்கள்.   ஊர்வலத்தில் அல்காயிதாவின் கொடியை பிடித்துக் கொண்டும், பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பபட்டுள்ளன.   இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கு அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.  கல்லூரியின் அனுமதியில்லாமல் இது  நடந்திருக்க வாய்பில்லை என உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.  இதற்கு முன் கேரளத்தில் இஸ்லாமியர்களின் செயல்பாடுகளை சற்றே கவனிக்க வேண்டும்.

       கேரள மாநிலத்தை காஷ்மீராக மாற்றுவதற்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் போராடி வருகின்றன.  அதிக அளவில் இஸ்லாமிய அமைப்புகள் செயல்படும் மாநிலம்  கேரளா.  இந்த அமைப்புகளில் முக்கியமான அமைப்பு பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா என்பதாகும்.  இந்த அமைப்பு கூட தடைசெய்யப்பட்ட மூன்று அமைப்புகளின் கலவையாகும்.  லவ் ஜிகாத் என்ற வார்த்தையை உருவாக்கிய கேம்பஸ் ஃபராண்ட் என்ற மாணவர் அமைப்பு, கேரள கல்லூரிகளில் அல்காயிதா மற்றும ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு ஆட்கள் சேர்க்கும் விதமாக, நடுத்தர, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவிகளை மூளை சலவை செய்து செயல்படுவதாக உளவுத்துறையினர் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்.  வெளிப்படையாக அல்காயிதாவிற்கும், ஐ.எஸ்.க்கும் ஆதரவாக ஊர்வலத்தை நடத்தியவர்கள் கேம்பஸ் ஃப்ராண்ட் அமைப்பினர் என கூறுகிறார்கள். 

       இது பற்றி பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேசிய டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் திரு லோக்நாத் பெஹரா,  இது சம்பவம் பற்றி முழுமையான விசாரணை  நடத்துவதற்கு இன்ஸ்பெக்டர் ஜெனரல் மனோஷ் ஆப்ரஹாம் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்த உத்திரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.   கல்லூரி வளாகத்திற்குள் இரு சக்கர வாகனங்களில் தடைசெய்யப்பட்ட அமைப்பின் கொடியை தங்களின் முகத்தை மறைக்கும் விதமாக பிடித்து,  அல்காயிதா மற்றும் இஸ்லாமிய தேசத்திற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியுள்ளார்கள்.  ஆனால் இது பற்றி கல்லூரி நிர்வாகம், ஏழு மாதங்களுக்கு முன் கல்லூரி விழாவில் ஊர்வலம் நடைபெற்றது என்றும்,  கல்லூரி வளாகத்துக்குள் தடைசெய்யப்பட்ட அமைப்பான அல்காயிதா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கு ஆதரவான குரல்கள் எழுகின்றன என தெரிவித்தார்கள்.

       2018-ம் ஆண்டின் துவக்கத்தில், கொச்சி மகாராஜா கல்லூரியில்,  இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பின் தலைவர் அபிலேஷ், இஸ்லாமிய ஜிகாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.  இவர் லவ் ஜிகாத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் கொலை செய்யப்பட்டார் என  காவல் துறையினர் தெரிவித்தார்கள்.   இந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி இஸ்லாமிய நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.   1979-ல் காங்கிரஸ் கட்சி, முஸ்லீம் லீக்கின் தலைவர் முகமது கோயாவை 60 நாட்களுக்கு முதல்வராக இருக்க சம்மதம் தெரிவித்த காரணத்தால், இஸ்லாமிய ஜிகாதிகள் கல்லூரிகளில் தஞ்சம் புகுவதற்கு வழி வகை செய்தது  என்ற குற்றச்சாட்டும் உண்டு.   கேரளாவும் மற்றொரு காஷ்மீராக மாறிவிடுமோ என்ற அச்சம்  நிலவுகிறது.  இந்த அச்சத்திற்கு வலு சேர்க்கும் விதமாக பல்வேறு சம்பவங்கள் நடக்கின்றன. 

       மகாராஜா கல்லூரி மாணவர் அபிமன்யூ என்பவரை பாப்புலர் ஃப்ராண்ட் ஆப் இந்தியாவின் மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ராண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பினரும்,  எஸ்.டி.பி.ஐ. என்ற அரசியல் பிரிவின் அங்கத்தினர்களும் சேர்ந்து கல்லூரி வளாகத்திலேயே கொலை செய்தார்கள்.  கொலைக்கான காரணம், லவ் ஜிகாத் என சக மாணவர்கள் தெரிவித்தார்கள்.  காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான கேரள ஸ்டுடேன்ட் யூனியன் , கேம்பஸ் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை இடதுசாரி அமைப்புகள் முன் வைக்கின்றன.  கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் கேம்பஸ் பிராண்ட்  ஆஃப் இந்தியா என்ற அமைப்பினரின் வன்முறை வெறியாட்டத்தின் காரணமாக பல்வேறு தரப்பு மாணவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களின் தாய் அமைப்பான பாப்புலர் ப்ராண்ட் ஆஃப் இந்தியாவின் வாக்குகள் தேவைப் படுவதால், தடை செய்வதற்கு கூட தயக்கம் காட்டுவதாக அதிகார வர்க்கத்தினர் குறிப்பிடுகின்றனர்.

       கேம்பஸ் ப்ராண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பினர், கல்லுரி மாணவ, மாணவியர்களை கடத்தி, மத மாற்றம் செய்வதாக காசர்கோடு காவல் நிலையத்தில்  புகார் கொடுக்கப்பட்டுள்ளது.  கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த பலர் மேற்படி  புகார் மனு அளித்துள்ளார்கள்.  தங்களது மகளை கடந்த சில தினங்களாக காவில்லை என்றும், சில இஸ்லாமிய மாணவர்கள் அவர்களை கடத்தி சென்று இருக்கலாம் என்ற அச்சத்தையும் வெளிப்படுத்தினார்கள்.  புகார் மனு கொடுக்கப்பட்டு சில தினங்களில்,  சோனியா செபஸ்டியன் என்ற கிறிஸ்துவ எம்.பி.ஏ. படிக்கும் மாணவி, தான் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாகவும், தனது பெயர் ஆயிஷா என்றும் கூறி ஒரு வீடீயோ வெளியிடப்பட்டது.  இதன் பின்னர் தான் 21 மாணவிகள் கடத்தப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாகவும் செய்திகள் வெளிவந்தன.  இவ்வாறு கடத்தப்பட்ட மாணவிகள் ஜிகாதிகளாக மாற்றம் செய்யப்பட்டு, புனித போருக்கு தயார்படுத்தப்பட்டார்கள் என உளவு துறையினர் தெரிவித்தார்கள்.  மறைமுகமாக நடந்த இந்த செயல்பாடுகள், தற்போது கல்லூரி வளாகத்திலேயே அல்காயிதாவிற்கு ஆதரவாக உடையணிந்து ஊர்வலம் செல்வதில் வந்து நிற்கிறது. கேரள கல்லூரிகளில் நிகழும் இந்த சம்பவங்கள்  மத்திய மற்றும்  மாநில அரசுகளுக்கு விடப்பட்டுள்ள  எச்சரிக்கையாகும்.

-    ஈரோடு சரவணன்