'அவர் ஒரு ஹீரோ!' பிரதமர்

'அவர் ஒரு ஹீரோ!' பிரதமர்

வட சென்னை பகுதியான பழைய வண்ணாரப்பேட்டையில் ரூ.5/- க்கு மக்களுக்கு மருத்துவம் பார்த்துவந்த டாக்டர்.ஜெயசந்திரன் இரு தினங்களுக்கு முன் காலமானார். இவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் டிவிட்டரில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,"சென்னையை சேர்ந்த டாக்டர்.ஜெயசந்திரன் ஒரு ஹீரோ. தன் வாழ்நாள் முழுவதும் மற்றவர்களின் மேம்பாட்டிற்காக செலவிட்டவர்."என்று கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன் இரங்கல் செய்தியில்,"டாக்டர்.ஜெயசந்திரன் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். ஏழை மக்களுக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக 5 ரூபாயில் சிறந்த மருத்துவ சேவையை வழங்கி உள்ளார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரின் தன்னலமற்ற சேவையை பல ஆண்டுகளாக பெற்று வந்த மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிராத்திக்கிறேன்." என்று கூறியுள்ளார்.