அஸ்ஸாமில் ஊடுருவியவர்களை கண்டறிய தேசிய  குடிமக்கள் பதிவேட்டின் இறுதி பட்டியல் நாளை வெளியீடு

அஸ்ஸாமில் ஊடுருவியவர்களை கண்டறிய தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி பட்டியல் நாளை வெளியீடு

அஸ்ஸாமில் ஊடுருவியவர்களை கண்டறிய தேசிய  குடிமக்கள் பதிவேடு இறுதி பட்டியல் நாளை வெளியீடு.  வங்கதேசத்தில் இருந்து அஸ்ஸாமில் ஊடுருவியவர்களை கண்டறிய தேசிய குடிமக்கள் பதிவேடு நாளை வெளியிடப்படுகிறது.  வங்கதேசத்தில் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அசாம் மாநிலத்தில் ஊடுருவுவதால் மண்ணின் மைந்தர்களான அஸ்ஸாமிகள் தொழில், வேலைவாய்ப்பு,கல்வி போன்றவற்றில் வங்காளிகளால்  புறக்கணிக்கபடுவதாக கருதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனால் குடிமக்கள் பதிவேட்டை வெளியிடவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.  அதனை ஏற்று அரசு தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாளை வெளியிடுகிறது. பா. ஜா .க அரசின் தேர்தல் வாக்குறுதியியல் குடிமக்கள் பதிவேடு வெளியிடப்படும் என குறிப்பிடபட்டிருந்தது.