ஆக்கிரமிப்பு காஷ்மீரை திருப்பி அளிக்கவேண்டும்

ஆக்கிரமிப்பு காஷ்மீரை திருப்பி அளிக்கவேண்டும்

பாகிஸ்தான் அரசானது ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை திருப்பி அளிக்கவேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.  மேலும் அவர் கூறியதாவது "ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள   பகுதி மக்கள் மகிழ்ச்சியாக இல்லை, அவர்கள் இந்தியாவுடன் இணைந்து இருப்பதையே விரும்புகின்றனர்.  இம்ரான் கான் போரை தவிர்த்து அமைதியை விரும்பினால் ஆக்கிரமிப்பு பகுதியை திருப்பி அளிக்கவேண்டும்" என கூறினார்.  

பாகிஸ்தான் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது என்பது

குறிப்பிடத்தக்கது. இந்தியாவானது பாகிஸ்தான் மீது போர்தொடுத்தால் பாகிஸ்தானின் கட்டமைப்பு முழுவதுமாக சிதைக்கப்படும் என சர்வதேச வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.