ஆக்ரா தலித் சிறுமி படுகொலையில் திடீர் திருப்பம்

ஆக்ரா தலித் சிறுமி படுகொலையில் திடீர் திருப்பம்

கடந்த செவ்வாய்க்கிழமை உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள லாலாவ் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்களால் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டாள். பின்னர், அந்த சிறுமி மருத்துவமனையில் மரணமடைந்தாள். இது சாதிப்படுகொலை எனக் கூறி சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட எதிர் கட்சிகள் உத்திரபிரதேச அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.

இப்போது, ஒரு தலை காதலே இந்த படுகொலைக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் முறை மாமன் அவளை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளான். அவள் காதலுக்கு மறுத்ததால் தனது இரு உறவினர்களுடன் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி அவளை கொலை செய்துள்ளான். அந்த பெண் இறந்து இரண்டு நாட்களுக்கு பின் அவனும் தற்கொலை செய்து கொண்டது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், விசாரித்ததில் இந்த உண்மைகள் வெளி வந்திருக்கின்றன. இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு நபர்களை கைது செய்துள்ள உத்திரபிரதேச போலீஸார் இரண்டு பைக்குகளையும் கைப்பற்றியுள்ளனர்.