ஆட்சிக்காக தொடர்ந்து பொய்களை சொல்லும் ராகுல் காந்தி

ஆட்சிக்காக தொடர்ந்து பொய்களை சொல்லும் ராகுல் காந்தி

2014 ல் அதிகாரத்திற்கு வந்த பின்னர் பிரதமர் மோடி அமேதிக்கு முதல் முறையாக நேற்று பயணம் செய்தார். 

இதனையடுத்து, ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து ட்வீட் செய்திருந்தார். அதில்  அமேதியில் 2010 ல் ஆயுத தொழிற்சாலைக்கான அஸ்திவாரத்தை நான் அமைத்தேன். பல ஆண்டுகளாக அது சிறிய ஆயுதங்களை உற்பத்தி செய்துள்ளது. நேற்று அமேதிக்கு நீங்கள் சென்றிருந்தீர்கள். வழக்கம் போலவே நீங்கள் பொய் சொன்னீர்கள். உங்களுக்கு வெட்கமில்லை என்று பதிவிட்டிருந்தார்.

ஒரு மணி நேரம் கழித்து ஸ்மிருதி இராணி ராகுல் காந்திக்கு பதிலளிக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டரில் பதிவிட்டார். இந்த புகைப்படத்தை கவனமாக பாருங்கள் 2007ம் ஆண்டு காலை அந்த நிகழ்ச்சியில் இருக்கின்றீர்கள். நீங்கள் 2010 என்று சொன்னீர்கள். அது 2010ம் ஆண்டா அல்லது 2007ம் ஆண்டா?, இது போன்ற தவறுகள் நிகழ்கின்றன ராகுல்ஜி. நீங்கள் அமேதியை பற்றி பொய் சொன்னீர்கள் என்று மத்திய அமைச்சர் கூறினார். 

ஸ்மிருதி இராணியின் இரண்டாவது பதிவு காங்கிரஸ் தலைவரை தாக்கியது.

முன்னதாக, மோடி நீண்ட கால பொய்யர்  என்ற ட்வீட்-க்கு இவர் பதிலளித்தார். பின்னர் அவர் நீங்கள் அமேதியின் வளர்ச்சிக்காக பயப்படுகீறிர்கள், நேற்று ஒரு கூட்டு முயற்சி கொர்வவில் துவங்கியது, அது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில்  ஏ.கே. 203 ரக துப்பாக்கிகளை தயாரிக்கும் ஒரு கூட்டு முயற்சியாகும், என கூறினார்.

பிரதமர் மன்மோகன் சிங் தான் அளித்த உறுதி மொழியில் தோல்வியடைந்தார் என்று குற்றம் சாட்டினார், "ஏன் அப்படிப்பட்ட ஒருவரை நம்புகிறீர்கள்?" என்று மோடி கூறினார்.