ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டம் - தமிழகத்தில் 14 லட்சம் பேர் பலன் அடைந்தனர்

ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டம் - தமிழகத்தில் 14 லட்சம் பேர் பலன் அடைந்தனர்

பிரதமர் விவசாயி ஆதரவு நிதி' திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 2.6 கோடிக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முதல் தவணையாக தலா ரூ.2,000 வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 14 லட்சம் விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். இத்திட்டத்தில் இதுவரை மொத்தம் ரூ.5,215 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி நடந்த பிரம்மாண்ட விழாவில் விவசாயிகளுக் கான நிதியுதவி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது, நாடு முழுவதும் சுமார் 1.01 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் முதல் தவணையாக தலா ரூ.2,000 வீதம் ரூ.2,021 கோடி செலுத்தப்பட்டது. அதேநாளில் சென்னையில் நடந்த விழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி, விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தை தொடங்கிவைத்தார். முதல் நாளில் தமிழகத்தில் லட்சக் கணக்கான விவசாயிகள் இத்திட்டத்தில் பலன் அடைந் தனர்.

‘பிரதமர் விவசாயி ஆத ரவு நிதி' திட்டம் அறி விக்கப்பட்ட 37 நாட்களில் 2.6 கோடிக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.5,215 கோடிக்கு மேல் செலுத்தப்பட்டுள்ளது.

‘பிரதமர் விவசாயி ஆதரவு நிதி' திட்டத்தால் பலனடையும் மாநிலங்களில் உத்தரபிரதேசம், ஆந்திரா, குஜராத் ஆகியவை முன்னணியில் உள்ளன. இதேபோல் குஜராத்தில் 25.58 லட்சம், மகாராஷ்டிராவில் 11.55 லட்சம், தெலங் கானாவில் 14.41 லட்சம், தமிழகத்தில் 14.01 லட்சம், ஹரியாணாவில் 8.34 லட்சம், அசாமில் 8.09 லட்சம், ஒடிசாவில் 8.07 லட்சம் விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர்.