ஆதரவு அளிக்க மாயாவதி - அகிலேஷ் மறுப்பு - பிரியங்கா ஒதுங்கியதன் பின்னணி

ஆதரவு அளிக்க மாயாவதி - அகிலேஷ் மறுப்பு - பிரியங்கா ஒதுங்கியதன் பின்னணி

உத்திரப்ப்ரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இவரை  எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ப்ரியங்கா காந்தி வாத்ரா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி ப்ரியங்கா போட்டியிடுவாரா என்பது சஸ்பென்ஸ் என்று கூறியது. இந்நிலையில் அஜய் ராய் என்பவரை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்துளளது. சென்ற 2014 தேர்தலில் மோடி 5.86 லட்சம் வாக்குகள் பெற, அஜய் ராய் 75000 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று பரிதாபமாக தோற்றுப்போனார், மீண்டும் அவரே போட்டியிடுவது ஆச்சரியம் தான்.

பிரியங்காவை களமிறக்க காங்கிரஸ் மாயாவதி அகிலேஷ் உதவியை நாடியது. சோனியா, ராகுல் தொகுதிகளில் ஆட்களை நிறுத்தாதது போல வாரணாசியிலும் ப்ரியங்காவுக்கு ஆதரவு தாருங்கள் என கேட்கப்பட்டது, ஆனால் மாயாவதி மறுத்துவிட்டார். ப்ரியங்கா வருகையினால் தங்கள் கூட்டணி ஓட்டுக்கள் சிதறுவதை பார்த்த அகிலேஷ் மாயாவதி கூட்டணி, இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. ப்ரியங்கா தேர்தலில் போட்டியிட்டால், தங்களுக்கு விழவேண்டிய வாக்குகளை காங்கிரஸ் பெற்றுவிடும், பாஜகவுக்கு விழ வேண்டிய வாக்குகள் சிதறாத நிலையில், பாஜக எதிர்ப்பு ஓட்டுக்கள் சிதறும் என்று கணக்கு போட்டனர். 

மஹாகூட்டணி ஆதரவு தெரிவிக்க மறுத்து விட்ட நிலையில், முதல் இடம் மோடி, இரண்டாம் இடம் பகுஜன் சமாஜ், ப்ரியங்காவுக்கு   மூன்றாவது இடமே கிடைக்கும். ராகுல் அமேதியில் சறுக்கும் நிலையில், பிரியங்காவும் படு தோல்வி அடைந்தால், கட்சிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும், 2022ல் பிரியங்காவை முதல்வர் வேட்பாளராக உ.பி. தேர்தலில் நிறுத்தும் காங்கிரஸ் முயற்சி தவிடுபொடியாகிவிடும் என்பதால், பிரியங்கா போட்டியிட வேண்டாம் என்று காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது.