ஆதியும் அந்தமும் இல்லா அண்ணாமலையான்

ஆதியும் அந்தமும் இல்லா அண்ணாமலையான்

நினைத்தாலே முக்தி தருவதும், பஞ்ச பூத தலங்களுள் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி கோலாகலமாக நடைப்பெற்று வருகிறது.  இன்று காலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இன்று மாலை பஞ்ச மூர்த்திகளும் கோவிலை விட்டு வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.  பின்னர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மலை மீது  கார்த்திகை தீபம் ஏற்றப்படுதலும் இன்று மாலை நடைபெறும்.

தீப திருவிழாவையோட்டி லட்சகணக்கான மக்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளதால் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு  ஏற்பாடுகளை செய்துள்ளது.