ஆம் ஆத்மியின் நஞ்சு பிரச்சாரம்

ஆம் ஆத்மியின் நஞ்சு பிரச்சாரம்

     நியூ பிரண்ட்ஸ் காலனியில் அமைந்துள்ள கன்யா கேந்திரிய வித்யாலயா பள்ளில்  கடந்த 29.01.2019ந் தேதி நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய டெல்லி முதல்வர் திருவாளர் அரவிந்த் கேஜரிவால், படிக்கும் பிஞ்சு மனசில் நஞ்சை விதைக்கும் விதமாக பேசியுள்ளார்.  அந்த நிகழ்ச்சியில் குழந்தைகளின் பெற்றோர்களிடம், நீங்கள்  பொதுமக்களிடம் ஒரு கேள்வியை கேளுங்கள் அவர்கள் மோடிக்கு வாக்களித்தால்,  அவர்களின்  குழந்தைகளை நேசிக்கவில்லை என்பதாகும்.   குழுமியிருந்த பெற்றோர்களிடம் நீங்கள் மோடிக்கு வாக்களித்தல், உங்கள் குழந்தைகளை நேசிக்கவில்லை என்பதாகும் என கூறினார்.  இதற்கு காரணத்தை கூறும் போது,  மோடி உங்களுக்காக ஒரு பள்ளியை கூட கட்டவில்லை.   எனவே உங்களுக்கு தேச பக்தி முக்கியமா? அல்லது மோடி பக்தி முக்கியமா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.   

          இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டெல்லி மாநில துணை முதல்வர் சிசோடியா, ஒரு படி மேலே போய், "ஒரு புதிய மற்றும் நியாமற்ற முறையில் மோடியில் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.    நீங்கள் மோடி வாக்களிப்பது, உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எதிராக செயல்படுவதாக அர்த்தம்.  டெல்லியில் பள்ளிகளை கட்டியவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்." என்று  கேஜரிவால் பேசியது  போலவே பேசியுள்ளார்.   

இருவருமே மத்திய அரசானது," எங்களின் நல்வாழ்வு திட்டங்களுக்கு முட்டுக் கட்டை போட்டு வருகிறது." என்றனர்.   ஆனால் அன்னா ஹசாரவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இருக்கும் போது, ஊழல் புரிந்த காங்கிரஸ் கட்சியுடன் எவ்வித உறவும் வைத்துக் கொள்ள மாட்டேன் என வீரவசனம் பேசி அரவிந்த் கேஜ்ரிவால்,  2013-ல் நடந்த தேர்தலின் போது, ஆட்சி அமைக்க தேவையான உறுப்பினர் இல்லாத போது, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்தார்.   இவர் மீதும், இவரின் தொண்டு நிறுவனத்தின் மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்த போதும், வாய் திறக்கவில்லை.  இவருக்காக போராடடிய பிரசாந்த் பூஷன், போன்றவர்கள் கட்சியிலிருந்து ஏன் வெளியேறினார்கள்?என்பதை பற்றியும் விளக்கி விட்டு மோடியை பற்றிய விமர்சனங்களை முன் வைக்கலாம்.

ஈரோடு சரவணன்.