ஆரோக்கிய பாரதியின் சேவை

ஆரோக்கிய பாரதியின் சேவை

கடந்த 16/10/2018 - செவ்வாய் அன்று சென்னை அகரமேலில் உள்ள ரவுண்ட் டேபில் 30 விவேகானந்த பள்ளியுடன்  ஆரோக்கியபாரதி இணைந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

இதில் ஆரோக்கியபாரதியின் சார்பில் அதன் வடதமிழ்நாடு தலைவர் மருத்துவர் ராம்தாஸ் மெகந்தி, அமைப்பு செயளாளர் ராஜதுரை, செயளாளர் சரவணகுமார் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு 6வது முதல் 10வது வரை பயிலும் சுமார் 400 மாணவர்களுக்கும், அங்கு பயிலும் மழலையர்களின் பெற்றோர்கள் சுமார் 200க்கும் அதிகமானோருக்கும் தனித்தனி குழுவாரியாக ஆரோக்கியம் சம்பந்தமான ஆலோசனைகள் வழங்கினர். இதில் பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.