ஆரோக்கிய பாரதி நடத்தும் மருத்துவ முகாம்

ஆரோக்கிய பாரதி நடத்தும் மருத்துவ முகாம்

ஆரோக்கிய பாரதி தன்னார்வ தொண்டு நிறுவனம், உடல் நலம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.  அதன் ஒரு பகுதியாக மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆரோக்கிய பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.


ஆரோக்கியபாரதி, சேவாபாரதி, எம் என் கண் மருத்துவமனை மற்றும் ஆதித்யா பல் மருத்துவமனைகளுடன் பகவான் ஸ்ரீ பாலசாயிபாபா சேவா சமிதி இணைந்து நடத்தும் ஒருநாள் இலவச பொதுமருத்துவம், கண் மற்றும் பல் மருத்துவ முகாம்.

இதில் இலவச மருத்துவ ஆலோசனைகளுடன் தேவைபடுவோருக்கு இலவச சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்படும்.

நாள் & நேரம்: 24/11/2018 - சனிக்கிழமை காலை 9:00 மணி முதல் 11:30 மணி வரை

இடம்: ஸ்ரீ கனகதுர்கா மேல்நிலை பள்ளி, வில்லிவாக்கம் பேருந்து நிலையம் பின்புறம், வில்லிவாக்கம், சென்னை-49

இந்த நிகழ்ச்சியில் தாங்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பதுடன் தங்களுக்கு தெரிந்தவர்கள் பயன்பெற இந்த செய்தியை அவர்களுக்கு தெரிவித்து அவர்களையும் அழைத்து வர வேண்டுகிறோம்.