ஆர்எஸ்எஸ் அகில பாரத  பொதுக் குழுவின் தீர்மானங்கள்

ஆர்எஸ்எஸ் அகில பாரத பொதுக் குழுவின் தீர்மானங்கள்

மார்ச் 8,9,10 தேதிகளில் மத்திய பிரதேச குவாலியரில் நடந்த ஆர்.எஸ். எஸ்....ன் அகில பாரத பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அவை பின்வருமாறு

இரண்டு தீர்மானங்கள் :

1) விலை மதிப்பற்ற குடும்ப முறையை பாதுகாத்திட

2) பாரம்பரிய, நம்பிக்கைகளை,பாதுகாத்திட

அகில பாரத பொதுச் செயலாளர் மா.பையாஜி ஜோஷி கூறுகையில் :

நமது ஒவ்வொரு கிளையும் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நாம் முடிவு செய்தோமோ. அதை நிறைவேற்ற நமது கவனம், முயற்சி அதிகம் தேவை.

விரைவில் சங்கத்தில் சுற்றுச்சூழல்-க்கான ஒரு புதிய துறை துவக்க உள்ளது. அது பசுமை, நீர் மேலாண்மை, பிளாஸ்டிக் தவிர்க்க போன்றவற்றில் கவனம் செலுத்தும்.

வரும் யுகாதி ஏப்ரல் 6ம் தேதி காலை 6.00மணி முதல் 7.30 வரை ஒவ்வொரு ஊரிலும், பகுதியிலும்"ஸ்ரீராம ஜெயராம ஜெயராம " மந்திரத்தை முழு சமுதாயத்தை சொல்ல வைக்க வேண்டும். அயோத்தியில் இராமரின் ஆலயம் அமைந்திட

அகில பாரத தலைவர் பரம பூஜனிய ஸ்ரீ.மோகன்ஜி பாகவத் கூறுகையில் :

* வேலை செய்ய செய்ய வலிமை உண்டாகும் .திறமையும் வளரும் .அதே சமயத்தில்  நமக்கு    அகங்காரம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் 

* நமது வேலையும் வேலையின் முறையும் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருக்கவேண்டும் .

* இயக்க வேலையில் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு வேலை செய்யும் பொழுது அதுவே சுபாவமாக மாறிவிடும்.

* வேலையின் நோக்கம் மாறாமல் கவனமாய் இருக்க வேண்டும் .

* வேலை செய்யும் பொழுது மற்றவர்களின்  பாராட்டுகள், கேலி கிண்டல்களால் நாம் பலியாகக் கூடாது .

* வசதிகளில்,சூழ்நிலைகளில் நாம் சிக்கிக்கொள்ளாமல்  அவற்றை நமது வேலையின் வளர்ச்சிக்கு சாதகமாக்கி கொள்ள வேண்டும்.