ஆர் எஸ் எஸின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு

ஆர் எஸ் எஸின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு

மார்ச் 8 முதல் 10 வரை குவாலியரில் நடைபெற்ற ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் அகில இந்திய பொதுக்குழுவில் அந்த இயக்கத்தைச் சார்ந்த 1420 பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் பேசிய ஆர் எஸ் எஸ்ஸின் பொதுச்செயலாளர் சுரேஷ் ஜோஷி அவர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் பல்வேறு நேர்மறை சமூக முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றார். 


அந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களில் ஒன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகும். 

ஆர்.எஸ்.எஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக புதிய முயற்சியை மேற்கொள்வதற்கு முடிவு செய்துள்ளது. நீர் பாதுகாப்பு, நீர் மேலாண்மை மற்றும் மரங்களை நடுவது போன்ற மூன்று முக்கிய செயல்களில் கவனம் செலுத்த உள்ளது, அதைத் தொடர்ந்து பிளாஸ்டிக் மற்றும் தெர்மோகோல் போன்றவற்றை அகற்றுவதிலும் ஈடுபடவுள்ளது. 


இந்த வேலைகளுக்காக பர்யவரன் விப்ஹாக் என்று உருவாக்கப்பட்ட அதற்கு ஆர்எஸ்எஸ் முழு நேர ஊழியர் கோபால் ஆர்யா என்பவரை பொறுப்பாளராகவும் நியமித்துள்ளது.