ஆர்.எஸ்.எஸ் தந்தைக்கு மகள் ஆற்றிய நன்றி..!

ஆர்.எஸ்.எஸ் தந்தைக்கு மகள் ஆற்றிய நன்றி..!

ஆர்.எஸ்.எஸ் ல் பணியாற்றிய ஒரே காரணத்திற்காக 1994 ம் ஆண்டு கேரளா கம்யூனிஸ்ட் கட்சியினர் சதானந்த மாஸ்டர் என்பவரின் இரண்டு கால்களையும் கொடூரமானமுறையில் வெட்டினர். மே 16 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த சோக கதையை தனது உரையில் குறிப்பிட்டு இந்நிகழ்வினை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தார். இன்னிலையில் கால்களை இழந்த தனது தந்தைக்கும், இந்த நிகழ்வால் மனம் வருந்திக்கிடந்த சுயம்சேவகர்களுக்கும் இன்பமளிக்கும் விதத்தில் அவரின் மூத்த மகள் ''யமுனாபாரதி'' சிவில் இன்ஜினியரிங் பட்டபடிப்பில் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் முதல் இடம்பெற்றுள்ளார் .