ஆர் எஸ் எஸ் பாராட்டு

ஆர் எஸ் எஸ் பாராட்டு

பாரதத்திற்கு ஒரு பெரிய வரலாற்று நாள். இன்று பாரதம் எதிர்ப்பு-சேட்டிலைட் (A-SAT) ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.இந்த சோதனைக்கு மிஷன் சக்தி என்று பெயர் சூட்டபட்டிருந்தது. இந்த வெற்றி சோதனையை பாரத பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று மதியம் தெரிவித்தார்.

இதையடுத்து மிஷன் சக்தி வெற்றி பெற்றதற்கு பாரத விஞ்ஞானிகளைப் பாராட்டி ஆர்.எஸ்.எஸ். அகில பாரத செய்தித் தொடர்பாளர் அருண் குமார் பின்வருமாறு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். " சாட்டிலைட் எதிர்ப்பு ஏவுகணை ஆயுதப் பரிசோதனை வெற்றி பெற்றதற்க்காக பாரத விஞ்ஞானிகளையும், பாரத அரசின் தலைமையையும் பாரத மக்கள் சார்பில் பாராட்டுகிறோம். இது இனி வரும் தலைமுறைகளுக்கும் ஊக்கம்தரும் சாதனை" என பதிவிட்டிருந்தார்.