ஆழிப்பேரலையின் ஆறாத சோகம்

ஆழிப்பேரலையின் ஆறாத சோகம்

2014ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தோனேஷ்யாவின் சுமத்திரா தீவுகளுக்கு அருகில் கடலுக்கடியில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் வங்க கடல் பகுதியில் சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை ஏற்பட்டு கடலோர பகுதிகளை தாக்கியது. தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளை தாக்கிய ஆழிப்பேரலையால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த சோக நிகழ்வின் 14ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

மக்கள் கடலோரங்களில் கூடியிருந்து கடல் கொண்ட தங்கள் சொந்தங்களுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தோனேஷியாவில் கடந்த சனிக்கிழமை கடலுக்கடியில் எரிமலை வெடித்ததால் மீண்டும் ஆழிப்பேரலை தாக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளது 14  ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒரு சோக நிகழ்வாகும்.