ஆஸ்திரேலியாவில் அபாரமாக தொடரை வென்ற இந்தியா

ஆஸ்திரேலியாவில் அபாரமாக தொடரை வென்ற இந்தியா

மெல்போர்னில் நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.  மூன்று போட்டிகளை கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சம நிலையில் இருந்தன. 

இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச தீர்மானித்தது. ஆஸ்திரேலியா  48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் ஹான்ட்ஸ் கோம்ப் அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் சஹால் அதிகபட்சமாக  6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் ஆடத்துவங்கிய இந்திய அணி  3 விக்கெட்கள்  இழப்பிற்கு 49.2  ஓவர்களில்  234 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 46 ரன்கள் எடுத்தார். தோனி 87 கேதார் ஜாதவ் 61 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.