இடைத்தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் தயார்

இடைத்தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் தயார்

அதிமுகவிலிருந்து பிரிந்த 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அது நீதிமன்றத்திலும் உறுதிப்படுத்தப்பட்டது. இது தவிர திருவாரூர் எம்.எல்.ஏ வாக இருந்த திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திருபரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ வாக இருந்த ஏ.கே.போஸ் ஆகியோர் மறைவினால் அந்த தொகுதிகளும் காலியாக உள்ளன. ஆக மொத்தம் தமிழ்நாட்டில் 20 தொகுதிகள் காலியாக உள்ளன.

இந்த இருபது தொகுதிகளிலும் எப்போது தேர்தல் வந்தாலும் போட்டியிட தனது மக்கள் நீதி மய்யம் கட்சி தயாராக இருப்பதாக அதன் தலைவரும் நடிகருமான கமலஹாசன் தெரிவித்தார். இன்று தனது பிறந்த நாளையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் மக்களின் கருவி என்றும் வேறு எந்த கட்சியின் கருவியாகவும் செயல்படவில்லை என்றும் கூறினார்.

அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.